செய்திகள்

புலம் பெயர் தமிழரின் அடுத்த தலைமுறையினர் தொலைந்த சந்ததியாகி விடுவார்களா?

-கலாநிதி சர்வேந்திரா

புலம் பெயர் தமிழர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தொலைந்த சந்ததியினராக மாறிவிடுவார்களா என்ற கேள்வினை எழுப்பும் பலர் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் உள்ளனர். இங்கு தொலைந்த சந்ததியினர் என்பது தாயகத்துடன் தொடர்பு அற்றவர்களாக, தமிழ் மொழி பேசமுடியாதவர்களாக, தமிழ்ப் பண்பாடு மறந்தவர்களாக, தமிழர் என்ற ஒரு சமூகமாக ஒழுங்கமைப்படாதவர்களாய், உதிரிகளாக தாம் வாழும் சமூகத்துடன் கரைந்து போபவர்களாக மாறி விடும் ஒரு நிலையைக் குறிக்கும். புலம் பெயர் தமிழ் மக்களின் தலைமுறையினர் தொலைந்த சந்ததியினராக மாறிவிடக்கூடாது என்ற அக்கறையனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இலண்டனில் இடம் பெற்ற அரசியல் மாநாடொன்றுக்கு விடுத்த வாழ்த்துச் செய்தியொன்றில் வெளிப்படுத்தியருந்தார். தலைவர் பிரபாகரனால் வெளிப்படுத்துப்பட்டட இவ் அக்கறையும் புலம் பெயர் நாடுகளில் தமிழ்மொழி கற்கும் பாடசாலைகள் பல உருவாகுவதற்கு ஊக்கியாகச் செயற்பட்டிருந்தது. இன்றைய பத்தி புலம் பெயர் தமிழரின் அடுத்த தலைமுறையினர் தொலைந்த சந்ததியினராக மாறிவிடுவார்களா என்ற கேள்வி குறித்து சில விடயங்களைப் பேச முனைகிறது.

புலம் பெயர் மக்கள் தமது தாயகத்துடன் பேணும் உறவுகள் தலைமுறை தலைமுறையாக நீடித்து நிலைக்கக் கூடியவையா? அல்லது இவ் உறவு முதலாம் தலைமுறையினர் மத்தியில் வலுவாக இருந்து பின்னர் அடுத்த தலைமுறையினர் மத்தியில் மெல்ல மெல்ல வலுவிழந்து போய ;விடுமா? இக் கேள்விக்கு புலம் பெயர் மக்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள்; இரண்டு வகையான வாதங்களை முன்வைக்கின்றனர். ஒரு தரப்பு வாதம் இத் தாயகத் தொடர்புகள் முதலாம் தலைமுறையினரிடம் வலுவாகவிருந்து பின்னர் மெல்ல மெல்ல வலுவிழந்து விடும் என்பதாக இருக்கிறது. இவ் வாதத்தை முன்வைப்பவர்கள் இதற்குத் தமது ஆய்வுகளில் இருந்து ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர். இதனை மறுதலிக்கும் ஆய்வாளர்கள் அடுத்த தலைமுறையினர் மத்தியிலும் இத் தொடர்புகள் வலுவாக இருப்பதற்கான நிலைமைகள் உள்ளதாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். குறிப்பாகப் பெற்றோர் நாடு கடந்த வாழ்க்கையினை வாழும் போது இச் சூழலுக்குள் வளரும் பிள்ளைகள் தமது பெற்றோரின் தாயகத்துடன் தொடர்புகளைப் பேணி பின்னர் அதனை வலுப்படுத்திக் கொள்ளும் நிலைமைகள் உள்ள னஎன வாதிடுகின்றனர். தமது வாதத்துக்கும் இவர்கள் தமது ஆய்வுகளில் இருந்து ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

இவ் ஆய்வுகளில் இருந்து புலம் பெயர் மக்களின் தாயகத் தொடர்புகள் குறித்து இவ்விரு வேறுபட்ட போக்குகளுக்கும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இருந்த போதும் தாயகத்துடனான தொடர்புகள் காலம் போகப் போக வலுவிழந்து போவதற்காக நிலைமைகள் கூடுதலாக இருப்பதாகவே தோன்றுகிறது. இதற்கிடையில் தமது தயாகம் எது என்பது தொடர்பாக கேள்விகளும் புலம் யெபர் வாழ்க்கைச் சூழலில் எழவே செய்கின்றன. புவம் பெயர்ந்த மக்களின் முதலாம் தலைமுறையினர் பலர் தாம் வாழும் நாட்டைத் தமது தாயமாகக் கொள்ளும் நிலைமைகள் உருவாகி விட்டன. இரண்டாம் தலைமுறையினருக்கு தாம் பிறந்து வளர்ந்த நாடுகளே தாயகமாக இருக்கிறது. தமது பெற்றோர் பிறந்த வளர்ந்த இடத்தையும் இரண்டாம் தலைமுறையினர் தமது தாயகமாகக் கொள்வார்களா? இவ்வாறு இரண்டு தாயகங்கள் கொண்டவர்களாக இவர்கள் வளர்வதை புலம் பெயர் மக்கள் வாழும் நாடுகளின் அரசுகளும் பெரும் சமூகமும் எவ்வாறு பார்க்கிறார்கள் போன்றவை சமூக விhதத்துக்கான பேசுபொருளாகவே இருக்கிறது.

புலம் பெயர் தமிழ் மக்களின் அடுத்த தலைமுறையினர் தொலைந்த சந்ததியாக மாறி விடுவார்களா? இதற்கான பதில் எதிர் வரும் 25 ஆண்டுகளில் தமிழர் சமூகம் இவ் விடயத்தை எவ்வாறு கையாளப் போகிறது என்பதில்தான் தங்கியிருக்கிறது. பல நாடுகளிலும் இரண்டாம் தலைமுறையினர் தமிழ் தெரிந்வர்களாக, தமிழ்க் கலைகள் தெரிந்தவர்களாக, தமிழ்ப் பண்பாடு தெரிந்தவர்களாக வளர்ந்து வருகிறார்கள். தமிழ் மொழியின பேசமுடியாத நிலையில் ஆயிரககணக்கான பிள்ளைகள் இருப்பினும் அவர்களில் பலருக்கு தமிழ் மொழி புரியும். தமிழ்க்கலைகளும் தமிழப்பண்பாடும் தெரியும். இதற்கு பெற்றோரின் அக்கறையும் கடும் உழைப்பும் தமிழ் மொழி, தமிழ்க் கலை படிப்பதற்கான பாடசாலைகளும் கோவில்களும் காரணமாக இருக்கின்றன. எமது தலைமுறையினர் தொலைந்த சந்ததயியனராக மாறிலிடக்கூடாது என்ற அக்கறையுடன் செயற்பட்டு வரும் பல சமூகசஇ செயற்பாட்டாளர்களின் அக்கறையும் உழைப்பும் இந் நிலையைப் பேண உதவுகிறது. இது எமது அடுத்த தலைமுறை தொலைந்த சந்தததியினராக மாறுவததைத் தடுக்க உதவலாம்.

ஆனால் இதேவேளை எமது அடுத்த தலைமுறையினருக்கு ஈழத் தாயாகத்துடனான தொடர்பும் பிணைப்பும் பலவீனமாக இருக்கிறது. யுத்தம் காரணமாகப் பெற்றோர்கள் தாயகத்துக்கு அடிக்கடி செல்லும் நிலை 2009 ஆம் ஆண்டு வரை இருக்கவில்லை. 2002 – 2006 க்கு இடைப்பட்ட யுத்த நிறுத்த காலத்தில் முதற்தடவையாகத் தமது பிள்ளைகளைத் தாயகத்துகஇகு அழைத்து வந்த பெற்றோர்கள் பலர் உண்டு. இதனால் பிள்ளைகளுக்கும் தமிழர் தாயகத்துக்குமான தொடர்புகள் பலவீனமாகவே இருக்கிறது. பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பல முதலாம் தலைமுறைத் தமிழர்களுக்கே தாயகத்துடனான தொடர்பு பலவீனமடைந்து விட்டது. 2009க்குப் பின்னர் பல பெற்றோர்கள் ஈழத் தாயாகத்துக்கு அடிக்கடி பயணம் செய்கின்றனர். தமது பிள்ளைகளுக்கும் தாயகத்துக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த பல பெற்றோர்கள் விரும்புகிறார்கள். இருந்த போதும் பிள்ளைகள் பலரிடம் இது குறித்து உற்சாகமான மனநிலை இல்லை. இதனால் பிள்ளைகளுக்கும் தயாகத்துக்கும் இடையே உறவை வலுப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகளைiயும் உத்திகளையும் பெற்றோர் செயற்படுத்துகின்றனர். பிள்ளகைளுக்கு உறவினரின் வாழ்க்கைக் கஸ்டத்தை புரிய வைக்க முயல்தல், விடுமுறைக்கு பிள்ளைகளை தாயகத்துக்கு அழைத்துச் செல்தல், விடுமுறை வீடுகளைத் தாயகத்தில் அமைத்தல், பிள்ளைகளுக்கு ஈடுபாடு உள்ள விளையாட்டு, கலை நிகழ்வுகளை தாயகத்தில் ஏற்பாடு செய்வித்தல், தரமான விடுமுறை விடுதிகளில் மகிழ்ச்சியான விடுமுறையினையினை ஏற்பாடு செய்தல் போன்ற பல்வேறுவகையான நடவடிக்ககைளப் பெற்றோர் எடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய நடவடிக்கைள் மூலம் அடுத்த தலைமுறையினரின் தாயகத் தொடர்புகளை வலுப்படுத்தும் பெற்றோரின் முயற்சி வெற்றியளிக்குமா?

அடுத்த தலைமுறையினரின் தாயகத்துடனான தொடர்புகளில் தாக்கம் செலுத்தும் காரணிகளில் ஒன்றாகத் திருமணங்களும் அமைகின்றன. புலம் பெயர் தமிழ் இளையோரின் மத்தியில் தமிழர்கள் அல்லாது வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்தல் அதிகரித்து வருகிறது. தமிழர்கள் தமிழரழ்களையே திருமணம் செய்ய வேண்டும் எனப் பெற்றோர்கள் வலியுறுத்தவதை இனவாதமாகப் பார்க்கும் பிள்ளைகள் பலர் உண்டு. தமது பிள்ளைகளுக்கு பொருத்தமான, தாம் விரும்பும் வகையிலான திருமணங்கள் அமைந்து விடவேண்டும் என்பதில் ஒருவித பதட்ட மனநிலை கொண்ட பல பெற்றோர்கள் உள்ளனர். திருமன விடயத்தில் பிள்ளைகளின் விருப்பத்தை மீறிசஇ செயற்பட முடியாதநிலையில்தான் புலம் பெயர் தமிழப் பெற்றோர்கள் உள்ளனர். அதனால் பிள்ளைகள் hதமிழர்கள் அல்லாதவர்களை வாழகஇகைத் துணையாக ஏற்றுக் கொண்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்குப் பெற்றோர்கள் தம்மை மாற்றி வருகிறார்கள். கலப்புத் திருமணங்கள் அதிகரிக்க அதிகரிக்க பிள்ளைகளின் தமிழர் தாயகத் தொடர்புகள் வலுவிழக்கும் நிலை உருவாகும்.

இதேவேளை எமது பிள்ளைகளின் நிறம் காரணமாகவும் புறத் தோற்றம் காரணமாகவும் தாம் வாழும் சமூகங்களுடன் முழுமையாகக் கரைந்து போதல் சாத்தியமல்ல. நூறாண்டுகள் வாழ்ந்தாலும் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்ற கேள்வி புலம் பெயர் நாடுகளின் பெரும் சமூகத்தின் மத்தியில் இருந்து அடுத்த தலைமுறையினரை நோக்கி எழவே செய்யும். இது தமது அடையாளத்தை பிள்ளகைளுக்கு உணரத்துவதோடு தமது வேர்களைத் தேடும் நிலைக்கு எமது பிள்ளைகளைத் தூண்டும். புலம் பெயர் நாடுகளில் இருக்கக்கூடிய இனவாத்தின் அளவும் தாக்கமும் பிள்ளைகள் தமது வேருடனான தொடர்புகளை வலுப்படுத்தும் காரணிகளில் ஒன்றாக அமையலாம்.

புலம் பெயர் தமிழ் அடுத்த தலைமுறையினர் தொலைந்த சந்ததியாகப் போகமல் தடுப்பதில் புலம் பெயர் பெற்றோர், புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமல்ல தாயக மக்களுக்கும் தலைவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இவ் விடயத்தில் அரசு உள்ள புலம் பெயர் மக்களுக்கு அவர்களின் அரசுகள் பல்வேறு நடவடிக்ககைளை மேற்கொள்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்த வரை புலம் பெயர் தமிழ் இளைய தலைமுறையினரைத் தமிழர் தாயாகத்துடன் இணைக்கும் முயற்சியில் தாயகத்தில் இருந்து பல்வேறு முன்னெடுப்புகள் தேவைப்படுகின்றன. கிராம அமைப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊடகங்கள், கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள், தொழில் முயற்சியாளர்கள், ஆலயங்கள், மனித உரிமை அமைப்புகள், பெணகள் அமைப்புகள், மேம்பாட்டு அமைப்புகள் போன்ற அனைத்து அமைப்புகளில் இருந்தும் புலம் பெயர் இளைய தலைமுறையினரை தாயகத்துடன் இணைக்கும் முன்னெடுப்புகள் கிளம்ப வேண்டும். அரசியல் தளத்தில் செய்படும் அமைப்புகளும் இவ் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு மகாணசபைகளும் இவ் விடயம் குறித்துச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

இவ் விடயத்தில் அடுத்துவரும் 25 ஆண்டுகளில் தமிழர் சமூகத்தின் செயற்பாட்டு வினைத்திறனே புலம் பெயர் தமிழரின் அடுத்த தலைமுறையினர் தொலைந்த சந்ததியாகி விடுவார்களா இல்iலையா என்பதைத் தீர்மானிக்கும்.