செய்திகள்

20,000 வருடங்களுக்கு பின்னர் தமது ‘ கலாசாரத்தை’ இழக்கும் அபாயத்தில் இருக்கும் உலகின் மிகவும் பழமையான ‘ சான்’ பழங்குடிமக்கள்

கூர்ப்பிலே இன்றைய மனித குலத்துக்கு (Homo Sapiens Sapiens ) முன்னோடிகளான Homo Sapiens மனிதர்களின் நேரடி வழித்தோன்றல்களாக இன்றும் தெற்கு ஆபிரிக்க நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ‘ சான்’ என்று அழைக்கப்படும் மக்கள் இன்று தமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் மரபு ஆகியவற்றை இழக்கும் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள்.

இன்றைய நவீன யுகத்துக்கும் 20,000 முற்பட்ட அவர்களின் வேட்டையாடும் கலாசாரத்துக்கும் இடைப்பட்ட இருவேறு வாழ்க்கை முறைக்களுக்குள் அவர்கள் சிக்குண்டிருக்கிறார்கள்.

தெற்கு ஆபிரிக்க நாடுகளான தென் ஆபிரிக்கா, பொஸ்வானா, அங்கோலா, நமீபியா ஆகிய நாடுகளில் வாழும் இந்த ‘ சான்’ இந மக்கள் Homo Sapiens மனிதர்களின் நேரடி வழித்தோன்றல்கள் என்பது பரபணு சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

san people 1

‘கலாசாரம் என்பது இல்லாமல் போய்விடக்கூடிய ஒன்று . அது ஒரு இயக்கத்துக்குரியது’ என்கிறார் பொஸ்வானாவின் பழங்குடி ‘சான்’ மக்கள் கூட்டமான ‘பசார்வா’ என்று அழைக்கப்படும் மக்களைசேர்ந்த பிஹெலா செகேரா. இவர் லண்டனில் உள்ள பொஸ்வானாவின் தூதரகத்தில் முன்னர் பணியாற்றியுள்ளார். மத்திய கலகாரி பகுதியில் வாழ்ந்த இவரது தந்தையின் தொழில் வேட்டையாகவே இருந்தது. 1997 ஆம் ஆண்டு பொஸ்வானா அரசாங்கம் இந்த பகுதியை பாதுகாப்பதற்க்காக இந்த பழங்குடி மக்களை அங்கிருந்து அகற்றி ஏனைய சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒரு மீளக்குடியமர்வு கிராமத்தில் வாழும் இந்த பழங்குடி மக்களுக்கு தமது கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை கட்டிக்காப்பது பசார்வா பழங்குடி மக்களுக்கு சிரமமாக ஆகிவிட்ட்டது.

சாதாரண பாடசாலைகளுக்கு செல்லும் பசார்வா மக்களின் குழந்தைகள் ஏனைய மக்களின் வாழ்க்கை முறைகளையே பயில்கிறார்கள். இதனால் அவர்களின் கலாசாரம் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் கல்வி கற்கும் நிலைமையும் அவர்களது மொழி அழிவடையும் ஆபத்தை உருவாக்கியுள்ளது.

பசார்வா மக்களின் ‘ ட்ரான்ஸ்’ என்ற பிரபல்யமான நடனமும் நவீன கால இசை மற்றும் நடனங்களால் அழிவடையும் ஆபத்து இருப்பதாக பிஹெலா செகேரா கூறுகிறார்.

“கலாசாரம் என்பது தனித்துவமானது. அதுவே எமது அடையாளம். அதனால் எமது சிறார்கள் எமது மூத்தவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவற்றை அவர்களிடம் இருந்து அறிந்து அவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் ‘ என்று அவர் அறிவுரை கூறுகிறார்.

san people 4

பசார்வா மக்களின் வாழ்க்கை முறையை சித்திரிக்கும் ஓவியம்