செய்திகள்

கதிர்காமம் – லுனுகம்வெஹேர பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வொன்று பதிவு

கதிர்காமம் – லுனுகம்வெஹேர பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.இதேவேளை நாட்டின் தென் பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவிகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

இதன்படி நேற்று திங்கட்கிழமை 2.5 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.இந்த நில அதிர்வினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பணியகம் தெரிவித்துள்ளது.(15)