செய்திகள்

கத்திச்சண்டையில் வடிவேலு, சூரியை நடிக்க வைத்தது எப்படி – ரகசியத்தை உடைத்த சுராஜ்

விஷால் படம் என்றாலே குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக கமெர்ஷியல் கலந்த சினிமாவை ரசிக்க தருகிறார்.

இந்நிலையில் அவரது ஒவ்வொரு படத்தின் வெளியீடும் ஒரு பண்டிகை நாளை நோக்கியே ரிலீஸ் செய்கிறார்.

அந்த வகையில் சுராஜ் இயக்கத்தில் தமன்னா, வடிவேலு , சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ள கத்திச்சண்டை என்ற படம் தீபாவளி அன்று வெளியாகும் என தற்போதே அறிவித்து விட்டார் விஷால்.

இப்படத்தின் மூலம் மீண்டும் காமெடி ட்ராக்கில் கலக்க வருகிறார் வடிவேலு. ஆனால் ஏற்கனவே சூரி இருக்கிறாரே எப்படி ரசிகர்கள் எண்ணும் போது, சமீபத்தில் பதிலளித்துள்ளார் சுராஜ்.

அதாவது முதல் பாதி முழுவதும் விஷாலுடன் வருவார் சூரி, அதே போல் இரண்டாம் பாதி முழுவதும் டாக்டர் புத்ரி என்ற கதாபாத்திரத்தில் சரவெடியாக கலக்கியுள்ளார் வடிவேலு.

ஆகமொத்தத்தில் ரசிகர்களுக்கு காமெடி கலக்கல் விருந்தாக இருக்கும் இந்த கத்திச்சண்டை என்கிறார்.

Kaththi-Sandai-Movie-Pics-1

N5