செய்திகள்

கத்திச்சண்டை வெறும் பொழுதுபோக்கு படம் மட்டும் அல்ல – விஷால்

இந்த வாரம் விஷால் நடிப்பில் கத்திச்சண்டை திரைப்படம் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை பற்றி சமீபத்தில் விஷால் பேசுகையில், கத்தி சண்டை படம் தீபாவளிக்கு வர வேண்டியது. கார்த்தியின் காஷ்மோரா வந்ததால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது திரைக்கு வருகிறது. தமிழில் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்படுகிறது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் வெளியாகிறது. வடிவேல் சினிமாவில் ஒரு சகாப்தம். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அவர் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இல்லாமல் கத்தி சண்டை படம் இல்லை. கதையை கேட்டதும் ஒப்புக்கொண்டார். வடிவேலுவின் மறுபிரவேசத்தை எல்லோருமே ஆர்வமாக எதிர்பார்த்தனர். அது என் படம் மூலம் நடந்து இருப்பது பெருமை அளிக்கிறது.

எனது படங்களில் இதுவரை கதாநாயகிகளின் முகம் சுழிக்கும் ஆபாச காட்சிகள் இருந்தது இல்லை. இனிமேலும் இருக்காது. இந்த படத்தில் சமூக பிரச்சினை ஒன்றையும் வைத்து இருக்கிறோம். என் படத்தில் சமூகத்தில் நடக்கும் பிரச்சனை பற்றி கண்டிப்பாக இருக்கும் படி பார்த்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

N5