செய்திகள்

கத்தி படத்திற்கும், நயன்தாராவின் அடுத்த படத்திற்கும் என்ன சம்பந்தம்?

விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படம் உருவாகிவந்த போது முருகதாசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் மீஞ்சூர் கோபி.

‘கத்தி படத்தின் கதை தனக்குதான் சொந்தம், அதை முருகதாஸ் திருடிவிட்டார்’ என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் அவர்.

அது பழைய கதை. சரி..இப்போ விஷயத்திற்கு வருவோம்.. மீஞ்சூர் கோபி தற்போது நயன்தாராவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படமும் ‘கத்தி’ போல தண்ணீர் பிரச்சனையை பற்றியதாம்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ‘காக்க முட்டை’ புகழ் சிறுவர்களான ரமேஷ், சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

N5