கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரண்
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரணடைந்துள்ளனர்.அத்துடன் தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர்.
இந்தநிலையில், அவர்களில் 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(15)




