கந்தபுராணம் காட்சிப்படுத்தும் பிரபஞ்ச அறிதுயில் ( Cosmic Consciousness)
மருத்துவர் சி. யமுனாநந்தா
முகவுரை
கந்தபுராணம் முதலில் அச்சிடப்பட்டது ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களாலே தான். 10346 பாடல்களை ஏட்டுச்சுவடியில் இருந்து எடுத்து அவற்றை மிகவும் பக்குவமாக எழுத்துபிழைகள் இல்லாதவாறு அச்சிட்டார். இது நடந்தது 1869ம் ஆண்டிலேயாகும். நாவலர் பெருமானின் 200ம் ஆண்டினை நாவலர் ஆண்டாக 2022ம் ஆண்டு கொண்டாடும் வேளையில் நாவலர் பெருமான் புராணங்களைப் புறக்கணிக்கக் கூடாது என முருகனருளால் கூறிய வார்த்தைகள்.
“பரமசிவன் உலகத்தைப் படைத்தல், அழித்தல் முதலியவைகளைக் கூறும் வேத வாக்கியப் பொருள்களை வலியுறுத்தி விரித்து, அறிவிப்பது உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும், மனுவந்தரங்களும், பாரம்பரியக் கதைகளுமாகிய இவ்வைந்தையுங் கூறுவதால் புராணம் பஞ்சலக்கணம் எனவும் பெயர் பெறும். இதிகாசமும் புராணத்துள் அடங்கும்”.
நாவலர் பெருமானின் மேற்கூறிய வார்த்தைகளை நாம் 2022ம் ஆண்டில் மீள நினைக்கும்போது இன்றைய விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியில் அகிலத்தின் தோற்றம் ஒடுக்கம் மாறிமாறி நிகழ்வதும், இக்காலங்கள் மனுவந்தரங்கள் என்றும், கல்பங்கள் என்றும் புராணங்களின் கூறப்பட்ட கணிப்புகளுக்கு ஆதாரமாக உள்ளமை தெரிகின்றது.
வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்பன வெவ்வேறு கல்பங்கள், மனுவந்தரங்களில் நிகழ்ந்த சம்பவங்களை ஆன்மீக ஞானிகள் மெய்யறிவால் தொகுத்து அருளியவையாகும். அந்தவகையில் கந்தபுராணமும், ப்பிரமஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் சுவாமிகள் அவர்களால் முருகப் பெருமான் அருளால் அருளப்பெற்றது. இதனை மெய் உணர்தல் என்றும், பிரபஞ்ச அறிதுயில் உணரல் என்றும் கூறலாம். இன்றைய அறிவியலின் உச்சத்திலும், புராணக் கதைகளிற்கு இயற்பியல் சார்ந்த விளக்கத்தினை எம்மால் அளிக்க முடியும். இதனை யான் சில கந்தபுராணப் பாடல்களை மேற்கோள் காட்டுவதனால் எடுத்துக் காட்டுகின்றேன்.
பிரபஞ்சத்தில் அகிலங்களின் தோற்றமும், அதில் உயிர்களின் பரிணாமமும் பல கல்பங்களாக நிகழ்ந்த வண்ணமே உள்ளது. இதனை இன்றைய விஞ்ஞானம் அகிலத்தின் தோற்றமும் (அகில உற்பவம்) அகிலத்தின் முடிவும் (அகிலவூழி) டீபை டியபெ யனெ டீபை ஊசரnஉh என்ற வரையறைக்கு அப்பால் ஆய்ந்து வருகின்றது.
தொலைவிலா வியர்த் தொகுதியுந் தொல்லையைம் பூதத்
தலகி லண்டமூ மோவு மாதி யங்குமர
னிலை கொண் மேனியினிவர் தடுமூ ரோமத்தினின்றே
யுலவை யின்றி முன்னுதித்திடு மிறுதி நாளொடுட்ங்கும்.
இங்கு இறுதிநாள் ஒடுங்கும் என்பது டீபை ஊசரnஉh அகில ஒடுக்கம் அல்லது அகிலவூழி ஆகும்.
இமிழ்தரு தரங்கப் பாலினெறி கடன் மதித்துவானோர்க்
கமிர்தினை யளிப்பான் வேண்டி யகிலமுமுண்டு தொன்றா
ளுமிழ் தரு திருமாலுள்ள வுணர்ந்து மந்தரமாமோங்க
ளிமிர் தரு புணரி செல்லு நிலைமைபோல் வீரன் போந்தான்.
இங்கு தொல்நாள் அகிலமும் உண்டு உமிழ் என்பது இன்றைய விஞ்ஞானத்தில் அகிலவூழி டீபை ஊசரnஉh எனப்படுகின்றது. திருமாலுணர்ந்து என்பதனை திருப்பாற்கடலில் திருமாலின் சயனமே பிரபஞ்ச அறிதுயில் என உணரலாம் யாம்.
சைவசித்தாந்தக் கருத்துக்களில் இவை பதி, பசு, பாசம் என்ற முப்பொருளாகவும், ஓங்காரம் என்ற பிரணவப் பொருளாகவும், “சிவாயநம” என்ற பஞ்சாட்சர மந்திரமாகவும் விளக்கப்பட்டுள்ளது. சைவசித்தாந்தக் கருத்துக்களை-யும், அவை சார்ந்த புராணக் கதைகளையும் ஒருங்கே அமையப் பெற்றது தான் கந்தபுராணம்.
கருவி மெய்ப்புலன் காட்டுவான் காண்பவன் காட்சிப்
பொருளெனப்படு நான் னமயுமைவகைப் பொறியு
மிரு திறத்தியல் வினைகளுங் காலமு மிடறு
மரபின் முற்றுறு பயனுமாய் நின்றனன் வள்ளல். 379
கந்தபுராணத்தின் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல சம்பவங்கள் சாதாரண பாமர மக்களுக்கும் எளிதில் விளங்கக்கூடியதாக புராணக் கதைகளாக அமைந்து உள்ளன. ஆனால் இவை பல கல்பங்கள் காலமாக நிகழ்ந்த சம்பவங்கள். இவை உயிரிற்கும், சடத்துவத்திற்கும், சக்திக்கும் உள்ள பல்வகையான ஒன்றிய நிலைகளைக் காட்சிப்படுத்துகின்றன. இவற்றிற் சிலவற்றை இற்றை விஞ்ஞான வெளியின் கண்ணே நோக்கலாம். தற்போதைய குவாண்டம் பௌதிக அறிவில் கூறப்படும் காலம் வெளிக்கு அப்பாலான ஐந்தாம் பரிணாமம் பற்றிய கருதுகோள்கள் எமது புராண இதிகாசத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களுக்கு ஓரளவு விடைகாண முற்படுகின்றன. எனவே கந்தபுராணம் உட்பட எமது சைவத்தமிழ் நூல்களை ஆய்ந்தறிதல் மிகவும் அவசியம். குறிப்பாக பௌதீகம், உயிரியல், இரசாயனம், பௌதீக விஞ்ஞானம் கற்போர் எமது சைவசித்தாந்தத்தினை உற்று நோக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே பௌதீகம், உயிரியல், இரசாயனம், பௌதீக விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள் உசாத்துணைப் பாடமாக சைவசித்தாந்தத்தினைக் கற்றல் அவசியமானதாகும்.
பிரபஞ்ச அறிதுயில் (ஊழளஅiஉ ஊழளெஉழைரளநௌள) பற்றிய விளக்கங்கள் கந்தபுராணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதனை ஐந்து நிலைகளில் ஆராயலாம். அவையாவன :
(1) பிரபஞ்சத்தின் இயற்பியல் தன்மை.
(2) சடத்திற்கும் உயிருக்கும் உள்ள இயற்பியல் இடைவெளி.
(3) பல் அண்டப் பயணங்கள்.
(4) கல்பங்களில் நிகழும் சம்பவங்களும், ஐந்தாம் பரிமாண நிலையும்.
(5) புராண இதிகாசங்களின் மெய்நிலை.
1. பிரபஞ்சத்தின் இயற்பியல் தன்மைபற்றிய விளக்கங்கள்
பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்கள்
வாரி வீழ்தரும் புன்னுனித் துள்ளி கண்மான
நேரி லாதமர் குமர வேனெடிய பேரருவி
னோரு ரோமத்ரினு லப்பிலா வண்டங்களுதிக்கு
மார வன்றிடு மேனியின் பெருமையை யறிவார்.
அவைபுகு படலம் – (139)
ஆவுதாகிய வடிவத்தின் கிலமுஞ் செறிந்து
மேவு மற்நிலை யனையனே யல்லது வேறிங்
கேவர் கண்டன ரவ்விரு வியற்கையை யெங்கோன்
றேவர் யாவர்க்குங் காட்டிடக் கண்டனர் சிறுது ஆவதாகிய வதவற்றின கிலம் அவைபுகு படலம் – (141)
அண்டங்களின் அதிர்வு பற்றிய பாடல்
வாழிய வுலகம் யாவு மன்னுயித் தொகையுமாய
வூழியிற் றனிநின்றார்க்கு முருத்தினார்ப் போலன்றே
லாழி கட்கரசனார்ப்போ வண்டங்க ணெக்க வார்ப்போ
வேழ்கடலு டைந்த வார்ப்பே வித்திறமார்ப தென்றார்
அண்டங்கள் நெக்க ஆர்போ.
இன்றைய நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் அண்டங்களின் அதிர்வுகள் ஈர்ப்பு விசைகளை உணர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈரெழு திறத்த வாளவுல கினுநின்று காறிப்
பேரொலி கேட்ட தின்னாற் பிறந்ததித்து முனியாதோ
தேருதி ரென்று பாங்கருழையரிற் செப்பத்திண்டேர்ச்
சாரதி விசய னென்பான் றாழ்ந்திவை புகலலுற்றான்
அகிலம் தேர்வடிவானது எனவும் இங்கு 14 உலகங்கள் உள்ளமையும் கூறப்பட்டுள்ளது.
பல அண்டங்களுக்கு பல பிரமன்கள் உள்ளன என்பதனையும் அது இறைவனின் நிகழ்தகவு இயல்பைத் தருகின்றது என்பதனையும் இப்பாடல் வெளிப்படுத்துகின்றது.
பரிசனர் பலரு மீண்டிப் பார்புகழ் சூரனென்று
மரசன்முன் கொணர்ந்து வேறோ ரண்டத்தினையனை யுய்ப்ப
வரிசையாலவனை நோக்கி மாணழிவுற்ற மற்றித்
திரு நகரதனைத் தொன்மை போலவே செய்தியென்றான்.
இங்கு வேறு அண்டப் பிரமன் என பல இறை நிகழ்தகவுகளை பிரபஞ்ச அறிதுயிற்கு எடுத்து இயம்புகின்றது.
கோடிக்கணக்கில் அண்டங்கள் உள்ளன. இதனை இன்று ஆரடவiஎநசளந என்கின்றனர்.
அள்ள வாதிய வண்டங்கனைந்த கோடியையுந்
தள்ள தானையா லோரிமைப் பொழுதினிற் றரவும்
பின்னர் மாற்றவும் வல்ல தோராதியம் பிரான்கா
ணுண்றொடே பொரு மாடலாற் செந்திவந்துற்றான்.
2. சடத்திற்கும் உயிருக்கும் உள்ள இயற்பியல் வெளி பற்றிய விளக்கங்கள்
கந்தபுராணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காற்றுடன் உயிர் கலத்தல் தொடர்பாக
காற்றுட னங்கிரியுங் கருங்கட் காலுனுங்
கூற்றனு மோருருக் கொண்ட வைகிய
தோற்ற மிதன்றி யிச்சூரன் முன்வரு
மாற்றலர் யாரென வறைகின்றார் சிலர். (204)
காற்றின்கதி, மயூரகதி, பெரியசரகதி, சசகத, வானரகதி, மல்லகதி எனக் காற்றின் வேகம் மாறுபடும்.
இயலுமைப் பெருநிறத் தினண்டங்களினிருந்த
புயலினம் பலவோர் வழித் தொக்கன பொருவ
மயிலிருஞ் சரமுயலொடு யூகமற் றொழிலைப்
பயில் பரித் தொகையளப்பில வயின் றொறும்பரவும்.
நகர் புகுபடலம் – (2)
உயிர் நுண்ணுருக் கொள்ளல்
நுணருதன் னுணர்வே போல நோக்கருந் திறத்தாற்றானோ
ரணுவுருக் கொண்டு வீரனடு களமதனை நீங்கி
யினை யனுகுமரன் போற்றி யெழுந்து விண்படர்ந்து மூதூர்க்
குணதிசை வாய் தனின்ற கோபுர மிசைக்கனுந்தன்
வீரவாகு தேவர் ஓர் அணு உருகொண்டு வேவு பார்த்தல் இது. உயிரின் ஐந்தாம் பரிமாணத்தில் செல்வதால் நிகழலாம்.
உயிர் பேருருக் கொள்ளல்
சுட்டும் வேற்படைத் தொல்குமரேசன்
தடிகண் முன்னி யருளுட னாண்டகை
படியளந் திடு பண்ணவறா மென
நெடிய பேருருக் கொண்டு நின்றானரோ.
முருகனின் அருளால் வீரவாகு தேவர் பிரமாவின் பாதத்தின் அளவு பேருருக்கொண்டார் இதுவும் உயிர் ஐந்தாம் பரிமாணத்தில் செல்வதால் நிகழலாம்.
தாவரமாக மாறலும் தாவரம் மனிதனாதலும் வள்ளியம்மை படலத்தில் கூறப்பட்டுள்ளது.
போனது கண்டு புனத்திடை வேங்கை
யான தொர் தன்மையை யனகன்று
கானவர் தம்மகள் காண்வகை தொல்லை
மானுட நல்வடிவங் கொடு நின்றான்.
வள்ளியம்மை திருமணப் படலம் (1)
மனிதன் பறவையாதல்
சூரபத்மன் முருகப்பெருமானால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றப்படல். மனிதன் பறவையாதலுக்கு உதாரணமாகும்.
சூளிகைப் பயணம் இன்றைய விஞ்ஞானிகளின் உருள் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு றுசயி ரி வுநஉhழெடழபல எதிர்பார்க்கும் உருள் தொழில்நுட்பத்திற்கு ஒப்பானது. சூளிகைப் பயணம் ஐந்தாம் பரிமாணத்தில் நிகழலாம். இவை கந்தபுராணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்;டவெளிப் பயணங்கள் மேற்கொள்ளப்படாமை பற்றி கந்தபுராணத்தில் காட்சிகளை காணலாம். இங்கு வீரவாகு தேவர் மேற்கொண்ட சூளிகைச் செல்லல் பற்றி கூறப்பட்டுள்ளது. சூளிகை வேல் வடிவானது. இது இன்றைய Nயுளுயு விண்வெளி ஓடத்திற்கு ஒப்பானது. சூளிகை அழிவு ஆயுதமாகவும் பயன்பட்டது.
புலவு கொளலரு செவ்வாய்ப் புட்செறி பொதும்பர்
பலமுடை யுருமு வீழப் பட்டதோர் பரிசதென்னத்
தொலைவகன் மைந்தன் விட்ட சூளிகை தகர்ப்பத் தொல்சீர்
மலிவுறு சனங்களோடு மன்ற மங்குற்றதம்மா.
இங்கு சூளிகை ஓர் எறிகணையாகச் செயற்படுகின்றது.
நோக்கிய திறலவனொச்சி தாவியே
யாக்க மொடமர் தரு மவுணன் கோயிலு
ளுக்கமொடும் பரானோடி முன்னுறு
மேக்குயர் சூளிகை மிசையிற் போயினான். (178)
சூளிகை மிகையில் போயினான் என்பது உருள் தொழில்நுட்பத்தி-னாலான ஊக்கியாகும்.
நலஞ்செய் சூளிகை நீங்கி விண்ணெறிக் கொடுநடந்து
கலஞ் செய்திண்டிறல் வெகுவாம் பெயருடைக் கடவுள்
வலஞ் செய்வாட் படையவுணர் கோன் மின்னி வீற்றிருக்கும்
பொலஞ் செய்கின்ற வத்தாணி மண்டபத்திடைப் போனான்.
ஒற்றையாழித்தேர் ஆகாயமார்க்கமாக ஒரே கதியில் செல்லல் சூளிகைப் பயணம் போன்றது.
எழுந்து வான்வழிக் சேறலுமார் கலியிடையே
விழுந்து கிழறுமிலங்கை மீண்டெழுந்து விரைவிற்
கழிந்த தொல்பர நீங்கிய காலையிற் கடலூர்
டழுந்து கின்ற பொற்றோணி மீச்சென்றிடு மதுபோல்.
கடல் பாய் படலத்தில் சூளிகைப் பயணங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
கடலில் விரைவில் செல்லல் இது ஐந்தாம் பரிமாணத்திலும் நிகழலாம்.
விரைந்துவான் வழிக்கொள் வீரன் விசைத்தெழுகாலி னண்;டந்
திரிந்தன வுயிர்கண் முற்றுந் தெருமரலுற்ற தெண்ணீர்
சுரந்திரு கொண்டல் யாவுஞ் சுழன்றன வடவையுண்ண
விருந்திரு மூழிக்காலு மாற்றலாதிரி போன (2)
பெருமிடல் பூண்ட தோன்றல் பெயர்தலும் விசைப்பினூதை
பரவின வெம்மை மாற்றிப் பரிதியைக் கனலைத் திங்கள்
வருணன தியற்கை யாக்கி வடவையின் முகத்துத் தோன்றித்
திரை கடலிருந்த வூழித் தீயையு மவித்துச் சென்ற. (3)
பரவின வெம்மை மாற்றிப் பரிதியைக் கனலைத் திங்கள் காற்றால் வெப்பத்தைக் குளிரச் செய்யலாம் என சூளிகையின் வெப்பம் காற்றல் தணிக்கப்படுதல் கூறப்படுகின்றது.
விரைசெறி நீப தாரோன் விரைந்து செல் விசைக்காறள்ளத்
திரை கடல் சூழித்துள் வாங்கித் திறன் மகோன்றிறத்திற் சேர
வரபியல் புரி வெஞ்சூர ணிகங்களவன் மேற் சென்று
பொரு முரணின்றித் தம்மூர் விரிவ போலாவாம். (4)
உருள் தொழில்நுட்பப் பயணங்கள் கடலிலும், ஆகாயத்திலும் அண்டங்கள் தாண்டியும் நிகழ்ந்த காட்சிகளைக் கந்தபுராணத்தில் நாம் காணலாம். மேலும் சூரனுடனான போர் நட்சத்திரப் போர்களுக்கு உதாரணமாக அமைவதனைக் காணலாம்.
இவ்வாறே கந்தபுராணத்தில் பல கல்பங்களில் நிகழ்ந்த சம்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் சிறப்பையும், சிவனருளையும் உணரத் தேவர்களும் பூலோகத்திலேயே பிறந்து சிவவழிபாடு இயற்றுவர். அதாவது மானுட வேடத்திலேயே பிரபஞ்ச அறிதுயில் நுகர்வர். எனவே தெய்வத்தமிழில் உள்ள எமது புராணங்களை நாம் போற்றிப் படிப்பது ஆன்மீக ஈடேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாததாகின்றது.


