செய்திகள்

கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா ….!

திருவனந்தபுரம், : கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்ய இருப்பதாக நடிகை பாவனா கூறியுள்ளார்.

தமிழில், ‘சித்திரம் பேசுதடி’, ‘வெயில்’, ‘தீபாவளி’,’ராமேஸ்வரம்’, ‘ஜெயம்கொண்டான்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை பாவனா. இவர் கன்னட தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதை மறுத்துவந்தார்.

இப்போது அந்த காதலை ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி பாவனா கூறியதாவது: இந்த வருடம் எனது திருமணம் கண்டிப்பாக நடக்கும். கன்னட தயாரிப்பாளர்தான்  மணமகன். இதையடுத்து நீண்ட நாளைய எங்கள் காதல் திருமணத்தில் முடிய உள்ளது.

2014-ம் ஆண்டே திருமணம் செய்துகொள்ள தீர்மானித்திருந்தோம். ஆனால், அடுத்தடுத்த படப்பிடிப்புகளால் அப்போது திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த தயாரிப்பாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை இப்போது வெளியிட மாட்டேன்.

நேரம் வரும்போது தெரிவிக்கிறேன்.

N5