கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது- சூர்யா ஓபன் டாக்
சூர்யா பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதிலும் தன் அகரம் நிறுவனத்தின் கீழ் பல குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று கஷ்டத்தில் இருந்து படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் ஊக்கத்தொகை வழங்கினர்.
இதில் பேசிய சூர்யா ’இதே அகரம் ஆரம்பித்த போது ஒரு மாணவன் மேடை ஏறி ஊக்கத்தொகையை பெற்று, என் பள்ளி மாணவிகள் கிழிந்த உடையை தான் அணிகிறார்கள், அவர்களுக்கு இதை தருகிறேன் என்றான்.
அந்த வார்த்தை என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது, அன்றிலிருந்து மேலும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது’ என கூறியுள்ளார்.
N5




