செய்திகள்

கபடி பயிற்சியாளராக நடிக்கும் தமன்னா

தமன்னா வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி சரித்திர கதையில் வாள் சண்டையிடும் போர் வீராங்கணையாக வந்தார். திரைக்கு வர உள்ள பெட்ரோமாக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, தட் ஈஸ் மகாலட்சுமி படங்களிலும் அழுத்தமான வேடம். விஷால் ஜோடியாக நடிக்கும் ஆக்‌ஷன் படத்தில் ராணுவ உளவு அதிகாரி கதாபாத்திரம்.

தற்போது தெலுங்கில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதை ‘பெங்கால் டைகர்’ வெற்றி படத்தை எடுத்து பிரபலமான சம்பத் நந்தி இயக்குகிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் கபடி விளையாடி பயிற்சி எடுத்து வருகிறார். ஏற்கனவே தமிழில் வெண்ணிலா கபடி குழு உள்பட பல படங்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.MtCd6st

அதுபோல் தெலுங்கில் தயாராகும் இந்த படமும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள். இதில் நடிப்பது குறித்து தமன்னா கூறும்போது, “விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் பயிற்சியாளராக நடிப்பது மகிழ்ச்சியான விஷயம். அதுமாதிரி ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்த கதாபாத்திரம் எனது மனதுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது” என்றார்.(15)