செய்திகள்

கபாலி படத்தின் பாடல்கள் ஜூன் 12ல் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தின் பாடல்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

லிங்கா படத்தையடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்குகிறார்.

ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார்.

சென்னையில் தொடங்கிய கபாலியின் படப்பிடிப்பு கோவா, மலேசியா, சிங்கப்பூர் என அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. கபாலி படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், கபாலி படத்தின் பாடல்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 12 அன்று கபாலி பாடல்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

N5