கப்ரால் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை
கடந்த ஆட்சிக்காலத்தின் போது மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரியளவிலான 13 நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக முன்னாள் மத்தியவங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலிடம் விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் எம்.பிக்கள் குழுவொன்றினாலேயே இந்தக் கோரிக்கை விடுகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2006 முதல் 2015 வரை அஜித் நிவாட் கப்ராலே மத்திய வங்கி ஆளுனராக பணியாற்றினார். இவரின் காலத்தில் சந்தேகத்திற்கிடமான 13 கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக நீதி மோசடி விசாரணை பிரிவினூடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர்கள் பிரதமரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




