கமரூனில் பள்ளி, மார்க்கெட்டை குறி வைத்து 4 வெடிகுண்டு தாக்குதல்: 22 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நடான கமரூனில் நடத்தப்பட்ட 4 தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு கேமரூனின் மெமே கிராமத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் இரண்டு தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. மற்ற இரண்டு தற்கொலைப் படை தாக்குதலும் நகருக்கு அருகில் உள்ள பள்ளி ஒன்றினை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது.
கமரூனில்கவர்னர் இந்த தாக்குதல் சம்பவத்தினை உறுதிபடுத்தியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உணவு விற்பனையாளராக மாறுவேடமிட்டு செய்துள்ளனர் என்று வடக்கு பகுதி கவர்னர் மிட்ஜியாவா பாகரி தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 105 பேர் படுகாயமடைந்துள்ளனர். நைஜிரியாவை மையமாக கொண்டு செயல்படும் போஹோ ஹாரம் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 6 வருடங்களில் போஹோ ஹாரம் தீவிரவாதிகள் இதுவரை நடத்தியுள்ள தாக்குதலில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது




