செய்திகள்

கருணா அம்மானை வீரனாக்கியது மகிந்தவே

கருணா அம்மான் எனப்படும் விநாகமூர்த்தி முரளிதரன் பிரபாகரனிடமிருந்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அவரிடமிருந்து தப்பி வந்தவர். அவரை வீரனாக்கியது மகிந்தவே என முன்னாள் இராணுவ தளபதி அமைச்சர் பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் மல்வத்து அஸ்கிரிய தேரரை சந்தித்த பின்னர் பொன்சேகா ஊடகவியலாளர்களை சந்தித்த போது கடந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த கருணா அம்மான் தொடர்பாக ஊடவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருணா அம்மான் பிரபாகரனிடமிருந்து உயிரை காப்பாற்றிகொள்ள தப்பி வந்த ஒருவர். இவர் பிரபாகரனுடன் ஒன்றாக இருந்தவர். அவர் பிரபாகரனின் வீடு இருக்கும் இடத்தைக் கூட காட்டாதவர். எமது இராணுவமு அவரின் வீட்டை கண்டுபிடித்தது. அவரை வீரராக்கியது. மகிந்த ராஜபக்‌ஷவே என அவர் தெரிவித்துள்ளார். -(3)