கலக்கப்போவது யாரில் எதிர்பாராத திருப்பமாக கலக்கியது இவர் தான்
பெரிய திரையானாலும், சின்னத்திரையானாலும் காமெடிக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.
அந்தவகையில் அனைவரையும் ரசிக்கவைக்கும் ஒரு காமெடி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்நிகழ்ச்சியில் அறிமுகமாகிதான் சிவகார்த்திகேயன் இன்று நட்சத்திர நடிகரானார்.
தற்போது இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் இறுதிச்சுற்று சமீபத்தில் திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நவீன், சதீஷ், முல்லை, கோதண்டம், குரேஷி, நிஷா, பழனி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் யாரும் எதிர்பாராத விதமாக அசத்தி குரேஷி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை நிஷா பெற்றார்.
திருச்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் கலந்து கொண்டனர்.
N5




