செய்திகள்

கலப்புத் திருமணம் எந்த அளவுக்கு சாத்தியம்?

கலப்புத் திருமனம் மூலம் சமாதானம் மலரும் என்று வடமாகாணத்தின் புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ள கருத்து வடபகுதியில் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

அவரது கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அவருடைய கலப்பு இனவாக்கம் என்ற கருத்து காலத்திற்கு ஒவ்வாதது, மக்களின் இயற்கை வாழ்க்கை முறைக்கு முரணானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று  வடபகுதி மக்களில் சிலர் தெரிவித்தனர்.

சாதி, மதம், இனம் என்பவை சமூகத்தில் பெரிய செல்வாக்கையும் ஆளுமையும் செலுத்தும் விஷயங்கள் என்பதால் கலப்புத் திருமணம் செய்வதென்பது எதிர் கால சந்ததியினர் மத்தியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என  பலர் தெரிவித்தனர்.

தேசிய அளவில் அனைத்து சமூக சயமங்களில் உள்ள மக்கள் கலப்புத் திருமணம் செய்ய வேண்டும், அப்படிச் செய்யும்போது கூடுதல் புரிதல் ஏற்பட்டு இணக்கப்பாட்டுக்கு வழி வகுக்கும் என அவர் தெரிவித்த கருத்தே விவாதப் பொருளாகியுள்ளது.

கலப்பத் திருமணம் செய்பவர்களில் யாராவது ஒருவர் தனது தனித்துவத்தையும், அடையாளத்தையும் இழக்க வேண்டி வரும், இது நிச்சயமாக மனத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

n10