கலப்பு நீதிப் பொறிமுறைக்கான சாத்தியம் காணப்படுகின்றது: எச்சரிக்கின்றார் மகிந்த ராஜபக்ஷ
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் தொடர்ந்தும் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் சயிட் அல் குசெய்னின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து இந்த அபாயம் காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்காலையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். படையிர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்காவிட்டால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது படைவீரர் எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெளிவாக கூறியிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது ஒட்டுமொத்த படையினரும் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்பதே அதன் அர்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களுக்கு என்ன சொல்லப்பட்டாலும் சர்வதேச சமூகத்திடம் நாடு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது நிதர்சனம் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
R-06




