கலப்பு நீதிமன்றம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் உட்பட பாரதூரமான மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் நீதிபதிகள் குழாமுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய “கலப்பு நீதிமன்றம்” (Hybrid Court) ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஷெயிட் ராட் அல் ஹுசைனின் நிலைபாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று அவர் தலைமை வகிக்கும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம் நேற்று வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு நீதிபதிகள் குழுமிலும் வெளிநாட்டு நீதிபதி ஒருவரேனும் அமர மாட்டார்கள் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்றைய தினம் ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம் தமது “டுவிட்டர்” கணக்கில் இவ்வாறான பதிவை வெளியிட்டுள்ளது. -(3)




