கல்மடு பகுதியில் மாடுகள் தொடர்ச்சியாக களவு: வவுனியா பொலிசில் முறைப்பாடு
வவுனியா, கல்மடு பகுதியில் மாடுகள் தொடர்ச்சிhக களவு போவதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அப் பகுதியில் மேய்சலில் ஈடுபடும் மாடுகள் இனந்தெரியாத நபர்களினால் பிடித்துச் செல்லப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மாடுகளை சுதந்திரமாக மேய்ச்சல் தரைகளில் விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமை நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் மாடு ஒன்று களவு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
N5




