செய்திகள்

கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக, 6 ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான மேன்முறையீடுகளை இன்று முதல் மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 8 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் ஒன்லைன் மூலமாக மேன்முறையீடு செய்ய முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

g6application.moe.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மேன்முறையீடு செய்ய முடியும்.

இந்த இணையத்தளம் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பாடசாலையை பார்வையிடவும், பாடசாலையை மாற்றுவதற்கான மேன்முறையீட்டையும் மேற்கொள்ள முடியும்.