கல் வீசுவோரை சுடுவதற்கு ரயில்வே திணைக்களத்திற்கு புதிய துப்பாக்கிகள்
ரயில்களுக்கு கற்களால் தாக்குதல் நடத்துவோர் மீது சூடு நடத்தும் வகையில் ரயில்வே திணைக்களத்திற்கு இராணுவத்தினரால் புதிய துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிகள் மூலம் 15 மீற்றர் தூரம் வரை சுட முடியுமெனவும் இவ்வாறாக 25 துப்பாக்கிகளை வெலிசர கடற்படை முகாமிலிருந்து திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள் பழைய ரகத்தை சேர்ந்ததாகும். இதனால் புதிய ரக துப்பாக்கிகளை வழங்க கடற்படை தீர்மானித்துள்ளது.
அண்மைக்காலமாக ரயில்களுக்கு கற்களால் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் அவ்வாறான தாக்குதலுக்கு இலக்காகி பயணியொருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக இது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ரயில்களில் ஆயுதம் தரித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)




