களுத்துறையில் சிறைச்சாலை பஸ்கள் மீது துப்பாக்கி சூடு : 6 பேர் பலி
களுத்தறை எத்தனமடல பகுதியில் சிறைச்சாலை பஸ்கள் மீது ஆயுதக் குழுவொன்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதுடன் அதில் சிக்குண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு சிறைச்சாலை பஸ்கள் களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கடுவலை நீதிமன்றத்திற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற வேளையில் கெப் வாகனத்தில் வந்த குழுவொன்று அந்த இரண்டு பஸ்கள் மீதும் சராமரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
இதன்போது அந்த பஸ்களில் ஒன்றில் பாதாள உலகக் கும்பல் தலைவரான ”சமயங்க” என்பவரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் அவரும் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் அடங்கலாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)




