களுத்துறை படகு விபத்தில் காணமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது
களுத்துறை கட்டுக்குருந்த கடலில் நேற்றைய தினம் ஏற்பட்ட படகு விபத்தில் காணமல் போயிருந்தவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
2 டோரா படகுகள் , 3 டிங்கிப் படகுகள் மற்றும் 15 சுழியோடி வீரர்கள் உள்ளிட்டோர் இந்த தேடுதல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகில் விபத்துக்குள்ளாகும் போது 41 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படுகின்றது. அவர்களில் 11பேர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் 29 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் ஒருவர் காணமல் போயுள்ளமை உறுதியாகியுள்ளதுடன் மேலும் யாரேனும் அந்த படகில் இருந்தனரா என்ற சந்தேகத்தில் தேடுதல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)




