காட்டுக்குள் காணமல் போயிருந்த 5 பேரும் விசேட அதிரடிப்படையால் மீட்கப்பட்டனர்
சிவனொளிபாத மலைக்கு அருகிலுள்ள ஏழு கன்னியர் மலை காட்டுப்பகுதிக்குள் காணாமல் போயிருந்த 5 பேரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை நல்லத்தண்ணியூடாக குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்றிருந்த நிலையில் காணமல் போயிருந்தனர்.
இவர்களை தேடி நேற்றைய தினம் காலை முதல் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மற்றும் இராணுவத்தினரும் தேடி காட்டுக்குள் சென்று தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை காட்டுக்குள்ளிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட காணமல் போனவர்களில் ஒருவர் தாங்கள் இருக்கும் காடு எந்தப் பகுதியென தெரியவில்லையெனவும் லக்ஷபான மின் உற்பத்தி நிலைலயத்திற்கு நீரை கொண்டு செல்லும் குழாயுக்கு அருகில் இருப்பதாகவும் தாம் இருக்கும் இடத்தை பொலிஸாருக்கு காட்டும் வகையில் அங்கு தீ மூட்டி புகையெழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து நேற்று இரவு அந்த பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் காணமல் போனவர்களை மீட்டுள்ளனர்.
லக்ஷபான தோட்ட முகாமையாளரின் 24 வயதுடைய மகனும் அவரின் நண்பர் ஒருவரும் மற்றும் நண்பிகள் இருவரும் அவர்களுக்கு உதவியாக தோட்ட தொழிலாளி ஒருவரும் அந்தக் காட்டுக்குள் சென்றுள்ள நிலையிலேயே காணமல் போயிருந்தனர். இவர்கள் அந்த காட்டுக்குள் வருவதாக தெரிவிக்கப்படும் யானையை பார்க்கவே சென்றதாக கூறப்படுகின்றது. -(3) 




