காணாமல்போனோர் குறித்த விசாரணைகளுக்கு மேற்கு நாடுகள் ஒத்துழைக்கவில்லை: கோதா
காணாமல் போனவர்கள் தொடர்பில் கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு மேற்குலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என முன்னளர் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் காணாமல் போனதாகக் கூறப்படும் பலர் வெளிநாடுகளில் தஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். காணாமல் போனதாக அறிவிக்கப்படும் சில அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு, இடையில் அவர்களாகவே விபத்துக்களில் சிக்கி உயிரிழந்திருக்கவும் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவிற்கு மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
R-06




