காணாமல் போனோர் அலுவலகம் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகளிடம் விசாரணை நடத்தும் : ஹெல உறுமய
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுமாகவிருந்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள 11,000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியுள்ள அந்தக் கட்சியின் பேச்சாளரான நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோரின் அலுவலகத்தினூடாக வடக்கில் காணமல் போனவர்கள் மட்டுமன்றி தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள 11,000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
-(3)




