செய்திகள்

காணாமல் போனோர் அலுவலகம் ”இன்றபோலின் ” உதவியை நாடும்

இலங்கையில் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டு வெளிநாடுகளில் தங்கியிருப்போரை கண்டுபிடிப்பதற்கு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடும் என அமைச்சரவை பேச்சாளரான ராஜித சோனரட்ன தெரிவித்துள்ளார்.
அதற்கான அதிகாரம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயெ அவர் இதனை தெரிவித்துள்ளார்.   -(3)