செய்திகள்

காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலத்தை அங்கிகரித்து சபாநாயகர் கருஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.
இன்று காலை அவர் அந்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி விரைவில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அண்மையில் குறித்த சட்டமூலம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)