செய்திகள்

காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தில் கையொப்பமிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிடுவாராக இருந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடியுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த சட்டமூலம் நிறைவேறிய முறையில் பிரச்சினைகள் உள்ளன. இந்நிலையில் அதனை அங்கீகரித்து சபாநாயகர் கையொப்பமிட்டால் அது அரசியலமைப்பை மீறும் செயலாக அமையும் இதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரலாம். என பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் தொடர்பாக நேற்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சபாநாயகரை சந்தித்ததை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  -(3)