செய்திகள்

காணாமல் போனோர் தொடர்பான காரியாலய சட்டத்தில் திருத்தம் : அமைச்சரவையில் தீர்மானம்

காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டமானது, பாராளுமன்றத்தில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காரியாலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை நிறைவேற்றுவதற்காக வேண்டி ஏதேனும் நபர் ஒருவரோ அல்லது அமைப்புடனோ ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் குறித்த காரியாலயத்திற்கு இருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சட்டத்தின் 11 பிரிவின் (அ) உறுப்புரையினை அகற்றுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அச்சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான சட்ட வரைபொன்றை மேற்கொள்வதற்காக வேண்டி சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)