காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இராணுவத்தை பாதுகாக்கும் : மகிந்த சமரசிங்க
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மூலம் இராணுவத்தினருக்கோ அல்லது பொலிஸாருக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லையெனவும் அதனூடாக அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிலர் குறித்த ஆணைக்குழு அமைக்கப்படுவதன் ஊடாக இராணுவத்தினர் காட்டிக்கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர். அப்படியெதுவும் நடக்காது. அவர்களின் கௌரவத்தை உரியமுறையில் அரசாங்கம் பாதுகாக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.
N5




