காத்தான்குடியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை……!
மட்டக்களப்பு – காத்தான்குடி நகரசபைப் பிரிவில் நேற்று சனிக்கிழமை மலை சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
உணவகங்கள், கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மீது சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார பரிசோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்தைப் பேணாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாரதார அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் காத்தான்குடி பிரதேசத்தில் உணவு தயாரிப்பு நிலையமொன்றில் பெறப்பட்ட உணவை உட்கொண்டமையால் 75 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
N5






