கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் படுகாயம்!
உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளனது.
இந்த விபத்தில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-(3)




