செய்திகள்

காலியில் நில அதிர்வு : அச்சமடையத் தேவையில்லை என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்

காலி ஹபுகல பகுதியில் இன்று காலை சிறியளவிலான நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இது தொடர்பாக பிரதேசவாசிகளிடமிருந்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் ஆனால் அது நில அதிர்வுதானா என்பது தொடர்பாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லையென காலி மாவட்ட அர்த்த முகாமைத்துவ உதவி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தற்போது ஆய்வுகள் நடத்தபட்டு வருவதாகவும் பிரதேசவாசிகள் இது தொடர்பாக அச்சமடையத்தேவையில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)