காலி முகத்திடல் போராட்டத்தில் சமூக ஊடகங்களில் செயற்பட்ட பிரித்தானிய பெண் பிரஜையை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி
காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்கள் குறித்து பதிவிட்ட பிரித்தானிய பிரஜை கெய்லி பிரேசரை கண்டுபிடிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.கடந்த ஒகஸ்ட் மாதம் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று விசா நிபந்தனைகளை மீறியதாக கூறி கடவுசீட்டை பறிமுதல் செய்தனர்.
ஓகஸ்ட் 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட இந்த வெளிநாட்டுப் பெண், தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், அவரைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
முன்னதாக, அவர் விசா நிபந்தனைகளை மீறியதால் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளதாக திணைக்களம் கூறியது, எனவே அவர் தனது பாஸ்போர்ட்டைப் பெற அவர்களைச் சந்திக்க வேண்டும். அவர் நாட்டை விட்டு வெளியேறவில்லை, ஆனால் அதிகாரிகளை ஏய்ப்பதாக அவர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.




