கால்பந்து போட்டியில் கலவரம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!
இந்தோனேசியாவின் கால்பந்து மைதானமொன்றில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் 127 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியொன்றின் பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரேமா எப்.சி அணி அவர்களின் பரம எதிராளி அணியான பெர்சேபயா சுராபயா அணியிடம் தோல்வி அடைந்த பின்னர், ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இவ்வேளையில் அங்கு ஏற்பட்ட அமைதின்மை நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இதன்போது மோதல்களிலும், கூட்ட நெரிசல்களிலும் சிக்கி 127 பேர் உயிரிழந்துள்ளதுடன், 180ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகளவில் விளையாட்டு மைதானங்களில் நடந்த மிகவும் மோசமான சம்பவமாக இது அமைந்துள்ளது.
-(3)




