செய்திகள்

காஸாவில் இருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

காஸா பகுதியில் தங்கியிருந்து எகிப்து சென்ற 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05) அதிகாலை அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கடந்த 3ஆம் திகதி எகிப்துக்கு வந்ததாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம் தெரிவித்திருந்தது.

அவர்கள் ரஃபா நுழைவாயில் வழியாக எகிப்துக்கு வந்து அங்குள்ள ஹோட்டலில் தங்கியதாக அதன் தலைவர் பென்னட் குரே குறிப்பிட்டார்.

17 இலங்கையர்கள் காசா பகுதியில் தங்கியிருந்த நிலையில், அவர்களில் நால்வர் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பின்மை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

-(3)