செய்திகள்
கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு: வவுனியாவில் சம்பவம்!
வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் கிணறொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் மாலை இவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-(3)




