கிதுல்கல பகுதியில் களனி கங்கையில் கலக்கும் கழிவுகளால் சரும நோய் ஏற்படும் அபாயம்
கிதுல்கல பிரதேசத்தில் களனி கங்கையில் மலக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கலக்கப்படுவதால் கிதுல்கல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அந்த கங்கையில் குளிப்பவர்களுக்கு சரும நோய்கள் ஏற்படும் நிலைமையேற்பட்டுள்ளது.
சுற்றுலாபிரயாணிகள் அதிகமாக வரும் இடமாக கிதுல்கல காணப்படுவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் மானேல் குலரட்ன தெரிவித்துள்ளார்.
” களனி கங்கையில் அதிகமான அசுத்தமாகும் பகுதியே கிதுல்கல. குறிப்பாக அந்தப் பகுதி சுற்றுலா பிரதேசம் என்பதனால் கழிவுகள் அதிகமாக அந்த கங்கையில் கலக்கப்படுகின்றது. அண்மையில் மத்திய சுகாதார அதிகார சபையினர் நடத்திய சோதனையின் போது ஈகோலின் பக்டரியா நீரில் கலந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திற்கு அந்த அதிகார சபை அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது. ” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த பகுதியில் களனி ஆற்றில் குளிப்பவர்களுக்கு சரும நோய்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




