செய்திகள்

கிரான்ட்பாஸ் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி : 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு கிரேன்ட்பாஸ் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரேன்ட்பாஸ் பதுலவத்த பகுதியில் நிகழ்வொன்றுக்காக மின் விளக்குகளால் அலங்கரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவொன்று வைத்திருந்த இரும்பு கம்பியொன்று மின்சார கம்பியில் மோதியதால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் உயிரிழந்த நபரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.