‘கிராமத்து படங்கள் வருவதில்லை’ ஜெயம் ரவி வருத்தம்
யதார்த்தத்தை முன்னிறுத்தி உருவாகும் படம் ‘என்று தணியும்’.
பாரதி கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இரா.பிரபாகர் இசை. இதன் ஆடியோ நேற்று வெளியிடப்பட்டது. பாரதிராஜா வெளியிட ஜெயம் ரவி பெற்றார். படம் பற்றி இயக்குனர் கூறும்போது,’ பெண்ணின் மன உறுதியை பேசும் கதை.
யுவன் மயில்சாமி, சந்தனா ஜோடி. மற்றொரு ஜோடி ராஜேஷ் பாலசந்திரன், கே.ஜீவிதா.
இதில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள்தான். யாருமே மேக் அப் போடவில்லை. கே.பழனிசாமி தயாரிக்கிறார்’ என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிராஜா,’இன்றைய படங்கள் அறிவு மட்டுமே சார்ந்திருக்கிறது. இதய துடிப்பும், உணர்வும் இருப்பதில்லை.
முகத்துக்கு முகம் பார்க்காமல் டெலிபோனில் பேசி படத்தை உருவாக்குகிறார்கள். இதனால் ஜீவனும் இருப்பதில்லை’ என்றார்.
‘கிராமப்பாங்கான கதைகள் தற்போது வருவதில்லை. சினிமாக்கள் 2டி பரிமாணம் முதல் 5டி வரை வந்திருக்கிறது. இப்படம் 6டி போல் இருக்கிறது. கிராமத்து மண்வாசனை திரையை கிழித்துக்கொண்டு தெறிக்கிறது’ என்றார் ஜெயம் ரவி. விழாவில் இயக்குனர் பி.வாசு, நடிகர்கள் கருணாஸ், சந்தானம், மயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
N5




