செய்திகள்

கிராம அலுவலர் அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்……!

வவுனியா, மகாறம்பைக்குளம் கிராமசேவையாளர் அலுவலகம் தாக்கப்பட்டமையை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராம அலுவலர் அலுவலகம் மீது கடந்த 23 ஆம் திகதி இளைஞர்கள் சிலரால் அடித்து சேதமாக்கப்பட்டது. இதனால் அலுவலகச் சொத்துக்கள் சில சேதமடைந்தன. இதனைக் கண்டித்தும், இக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரியும் மாகாறம்பைக்குளம் கிராம அலுவலர் அலுவலகம் முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது, வன்னி மாவட்ட நாமாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் வவுனியா பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.விஜயரட்ணம் அவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
N5
DSC_1577 copy DSC_1597 copy