செய்திகள்
கிரிக்கெட் மோதலில் 16 வயது மாணவன் பலி
மத்துகம பகுதியில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 16 வயது பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளான்.
கிரிக்கெட்டின் போது வைற் பந்து தொடர்பாக எழுந்த வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதையடுத்து விக்கெற்று தடியால் அந்த மாணவன் மீது அங்கிருந்த ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் அதனால் தலையில் பலத்த காயமடைந்த அந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)




