செய்திகள்

கிளிநொச்சியில் 26 வயது இளைஞர் கொலை!

கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் இன்று(01) காலை இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-(3)