செய்திகள்

கிளிநொச்சியில் 2602 பேர் மீள்குடியமர்விற்காக பதிவு

கிளிநொச்சி மாவட்டத்தில் 748 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 602 பேர் மீள்குடியமர்விற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால யுத்;தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்விற்கு கடந்த 2009ம் ஆண்டின் இறுதியில் இருந்து அனுமதிக்கப்பட்ட போதும் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதனாலும் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினாலும் இதுவரை ஏராளமான குடும்பங்கள் மீள்குடியமர முடியாத நிலை காணப்படுகின்றது.

இருந்தபோதும் இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேசத்தின் 129 குடும்பங்களைச் சேர்ந்த 421 பேரும் கண்டாவளைப்பிரதேசத்தில் 16 குடும்பங்களைச்சேர்ந்த 49 பேரும் பதிவுகளை மேற்கொண்டுள்ளபோதும் குறித்த காணிகள் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருப்பதனால் இதுவரை மீள்குடியமர்விற்கான அனுமதிகள் கிடைக்கப்பெறாத நிலை காணப்படுகின்றது.

இதேவேளை பூநகரி பிரசேத்தில் இரணைதீவு கடற்தொழில் கிராமம் முழுமையாக கடற்படையினரின் பயன்பாட்டில் இருப்பதனால் 326 குடும்பங்கள் சொந்த இடத்தில் மீள்குடியமர முடியாத நிலை அத்துடன் மட்டுவில்நாடு பகுதியில் பொலிசாரின் பயன்பாட்டில் தனியார் காணிகள் உள்ளமை உள்ளிட்ட காணரங்களின் 346 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 232 பேர் மீள்குடியேற இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றுவதில் உள்ள தாமதத்தால் 257 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வரையில் மீள்குடியமர முடியாத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு 748 குடும்;;பங்களைச்சேர்ந்த இரண்டாயிரத்து 602 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ள போதும் இதுவரை மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்படாத நிலையில் வெளி மாவட்டங்களிலும் மாவட்டத்திலும் உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றன.