செய்திகள்

கிளிநொச்சில் நடைபெற்ற வடக்குமாகாண கூட்டுறவாளர்களின் மே நாள் ஊர்வலம்

கிளிநொச்சியில் வடக்குமாகாண கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மேதின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

வடமாகாண கூட்டுறவாளர்களின் மேதினப்பேரணியும் பொதுக்கூட்டமும் கிளிநொச்சியில் நேற்று (01-05-2016) பிற்பகல் 2.00 மணிக்குஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

வடமாகாண கூட்டுறவு அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து இம்முறை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்த மேதினப் பேரணி கிளிநொச்சி கரடிப்போக்குசந்தியில் இருந்து ஆரம்பமாகி தொழிலாளர் உரிமைகளைச் சித்தரிக்கும் ஊர்தி பவனிகளுடன் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தை சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் கூட்டுறவாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

IMG_3419 IMG_3426 IMG_3429 IMG_3441 IMG_3451