செய்திகள்

கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் கசிப்பு மையம் சுற்றிவளைப்பு ….!

கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பெருந்தொகை கோடா, கசிப்பு, மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணம் மோட்டார் சைக்கிள் ஒன்று என்பவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் விசேட குற்றத்தடுப்பு பொலிசார்  (21-02-2016) காலை 7.45 மணிக்கு மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ,,

பாரியளவில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளும் இடம் ஒன்றினை சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதலின்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா சுமார் ஆயிரத்து 260  லீற்றர்  கசிப்பு 50 போத்தல், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணம் 4 கிலோ ஈஸ்ட், என்பனவும் சம்பவ இடத்தில் இருந்த நான்கு பேர் தப்பியோடியதாகவும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தப்பிச்சென்றவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
N5
IMG_1326 copy