செய்திகள்

கிளிநொச்சி பூநகரி மழைநீர் சேமிப்பு திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார் சந்திரிகா

கிளிநொச்சி பூநகரி மக்களுக்கான மழைநீர் சேமிப்பு திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆரம்பித்து வைத்தார். மழை நீர் சேமிப்பு திட்டத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று காலை 10.30 மணியளவில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விசேட வானூர்தியில் வந்திறங்கிய முன்னாள் ஜனாதிபதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் நடராஜன் மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் உ்ள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடுகையில்,

இப்போதுள்ள அரசாங்கத்தின் மூலம் இரண்டும பிரதான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்களிற்கான அபிவிருத்தி மற்றும் காணாமல் போனோரை கண்டறிதல்ஆகிய இரண்டுமே இதுவாகும். காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் யெற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இராணுவம் மற்றும் பொலிசாரிடத்தில் சென்று காணாமல் போனவர்க்ள என பல்வேறு தரப்பினர் தமது உறவினர்களை தேடி வருகின்றனர். இவர்களின் உறவுகள் காணாமல் அக்கப்பட்டமைக்கு சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

நல்லிணக்கத்திற்கான அமைப்பின் பிரதான வேலையாக பல தற்புாது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, குறிப்பாக இன்றய தினம் முன்னெடுக்கப்புடும் வேலைத்திட்டமான மழை நீர் சேமிப்பி திட்டத்தினையும் குறிப்பிடலாம். பாடசாலை மாணவர்களிற்கு இடையில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்புடுகின்றது, தமிழ் சிங்கள் முஸ்லிம் இனங்களிற்கு இடையில் இவ்வாறான நல்லிணக்கம் ஏற்படுத்தப்புடுவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு நிதி வழங்கிய ஞானம் அறக்கட்டளையினருக்கு நன்றி தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா குறிப்பிடுகையில்,

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் 80 ஆயிரத்தி்கு அதிகமானவர்க்ள விதவைகளாக்கப்பட்டுள்ளனர். முன்னைய காலத்தில் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் கண்டதன் பின்னரே விதவைகளான சம்பவங்கள் உண்டு. ஆனால் இன்று இளம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். பலர் அங்கவீனர்களாகவும் ஆக்கப்படடு உள்ளனர். மா்திரமன்றி பலர் காணாமல் போயும் உள்ளனர்.

முன்னால் ஜநாதிபதி சந்திரிக்கா அம்மையார் வடக்கிற்கான பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக நேற்றிம். இன்று பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். யுத்தத்தால் பாதக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என முன்னால் ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ம்களிற்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவரை கேட்டுக்கொண்டார்.

கடந்த அரசாங்கத்தின்புாது பல்வேறு நெருக்கடிகளை வடக்கு மாகாணம். எதிர் கொண்டுள்ளது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்கள் பல்வேறு திட்டங்களை அனுபவிக்க முடிகின்றது. வடக்கு மாகாண ச அமைக்கப்பட்டு 2 வருடங்கள் எவ்விதமான அதிகாரங்களும் வழங்கப்படாத நிலையில் இருந்தது. ஆனால் புதிய அரசாங்கம் மகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கியிருந்தது.

வடக்கில் பல பாடசாலைகள் இன்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன. தரையில் இருந்து கல்வி பயில வேண்டிய நியை நான் நேரில் சென்று பார்த்தேன். தளபாடங்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வடக்கிற்காக அதிகளவான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

unnamed (2) unnamed (3) unnamed (4)