செய்திகள்

கிளிநொச்சி, மட்டக்களப்பில் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு  விழா

வடக்கு , கிழக்கு மாகாணம் எங்கிலும் வாழும் தமிழ்  மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இணைந்து நடாத்தும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா இன்னும் 50 நாட்களில் கிளிநொச்சியில் பிரமாண்ட விழாவாக ஆரம்பமாக உள்ளது . வடக்கு மாகாணத்துக்கான விளையாட்டு போட்டிகள் அனைத்தும் கிளிநொச்சியிலும் கிழக்கு மாகாணத்துக்காக போட்டிகள் அணைத்தும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது.
தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ,  ஐ.பி.சி தமிழ், நம்பிக்கை ஒளி  இணைந்து நடாத்தும்  இவ்விளையாட்டு விழா  தமிழ் மாற்றுத் திறனாளிகள்  தலைமையில் நடைபெறுகின்றது.
2016ம் ஆண்டு ஏலவே நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவை வெகு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடந்திய தமிழ் மாற்றுத் திறனாளிகள் மீண்டும் அவ்வாறானதொரு விழாவை நடாத்த முனைகின்றார்கள். அங்கங்களை இழந்து , சக்கரநாட்காழியில் முடக்கப்பட்டு வாழும் ஒரு சமூக கூட்டம் ஒவ்வொரு வருடமும் தமது வாழ்வு குறித்து ஒரு விளிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் நடாத்தும் இந்த விளையாட்டு விழா , அவர்களிடையே விளையாட்டு வீரர்களையும் உருவாக்குகின்றது. அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்காக நடாத்தப்படும் சர்வதேச போட்டிகளில் தற்போது மிளிரத் தொடங்கி உள்ளார்கள்.
இம்முறை போட்டிகளை மேலும் வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு , கிழக்கு மாகாண சபைகள் மாற்றுத் திறனாளிகளின் முயற்சிகளுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். போட்டிகள், மாகாண சமூக சேவைத் திணக்களம் , விளையாட்டு உத்தியோகத்தர்களின் மேற்பார்வையிலும் மாற்றுத் திறனாளிகளின் ஒருங்கிணைப்பிலும் நடைபெறும்.
மாவட்டம் தோறும் போட்டிகள்
போட்டிகள் அனைத்தும் முதலில் மாவட்ட ரீதியாக நடைபெறும். அதன் அடிப்படையில் தற்போது ஒவொரு மாவட்டத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் அமைப்புக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
லண்டனில் இராப்போசனம்.
இப்போட்டிகள் குறித்தான விளிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் லண்டனில் 24.06.2017சனிக்கிழமை ஓர் இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம் : நட்சத்திரா மண்டபம் : Snakey Ln, Feltham TW13 7NA
காலம் : 24.06.2017 சனிக்கிழமை : மாலை  06.00
TPS Dinner